பருப்பு விலையேற்றமும் சென்னை வெள்ளமும்
இன்று தங்களது
உழைப்பையும் நேரத்தையும் செலவிடும் பொதுமக்களில் பெரும்பன்மையனவர்கள் தங்களது
பிழைப்புக்கான செயலகங்கள் திறக்கப்படும்போது சென்றுவிடுவார்கள் என்பது உறுதி.
அங்குதான்
அவர்கள் இந்த இழப்பை ஈடுகட்டுவதற்காக இன்னும் பல மடங்கு அதிகமாக உழைக்க வேண்டும்.
இது ஒரு குழி, இதை சுற்றி சுற்றித்தான் வந்ததாகவேண்டும்.
உடனடி
பயன்தராத எதனைம் வைத்துக்கொளுமளவு மக்களுக்கு இன்று நேரமில்லாமல் போய்விட்டது.
இன்றைய
பொருளாதார சூழலில் குறிப்பாக நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் குடும்பத்தோடு
செலவிடுவதற்கான நேரத்தையும் நிறுவனங்கள் பிடுங்கிக் கொள்வதில் வியப்பேதும் இல்லை.
இதுதான் யதார்த்தம்.
இந்த சுழலில்
அவர்களுக்கு பொதுநலம் குறித்து சிந்திக்கவும் குளங்களை ஆக்கிரமிப்பு செய்யும்
அரசியல்வாதிகளுக்கு எதிராக போராடவும் அழைப்பது அவர்களின் பிழைப்புக்கு
வேட்டுவைப்பதாக மட்டுமே அமையும்.
பெரும்பாலான
ஆக்கிரமிப்பாளர்களும் பிழைப்புக்காக ஆக்கிரமிபவர்களே என்பதையும் கொஞ்சம்
புரிந்துகொள்ளத்தான் வேண்டும். வைரமுத்து சொன்னதுபோல் " வயிற்றுக்காக
வாழ்பவர்கள்" அவர்களின் வாழ்க்கை அவர்களின் வயிற்றை சுற்றி மட்டுமே
இருக்கிறது. இதனைத்தான் கடந்த நீயா நானாவில் பத்திரிக்கையாளர் சமஸ்
சுட்டிக்காட்டினார்.
எனில் இங்கு
இருக்கும் நதிகளையும் ஏறி குளங்களையும் பாதுகாக்க வழியே இல்லையா. கண்டிப்பாக
இப்போது இருக்கும் மனநிலையில் இப்போது இருக்கும் மக்கள் வாழ்க்கை சுழலில் அடுத்த வருடம் மழை பெய்யா விட்டால் இன்று நிகழ்ந்த வெள்ளப்
பேரழிவு மறந்து போகும்.
இதற்கும்
பருப்பு விலையேற்றத்திற்கும் என்ன சம்பந்தம்.
""இன்று சென்னையில் வந்த வெள்ளத்தைப்போல் பல
ஆண்டுகளாக தமிழகத்தின் அல்ல இந்தியாவின் கிராமங்களில் வெள்ளம் இருந்துகொண்டே
இருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கில் மக்கள் வெள்ளத்தில் மூழ்கிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருமுறை அல்ல
எப்போதுமே வெள்ளம் அவர்களது கழுத்தளவு இருந்துகொண்டே இருக்கிறது.
இந்த
இடப்பெயர்வுதான் நகரங்களின் பெரும்பாலான ஏரிகளையும் குளங்களையும்
ஆக்கிரமித்துள்ளது. இந்த இடப்பெயர்வுதான் நகரங்களிலும் அவர்களை வெள்ளம்
அடித்துசெல்கிறது.""
கடந்த
மாதத்தில் பருப்பின் விலை 100 லிருந்தது 200 வரை சென்றது.
இந்தியாவில் புதிதாக அரசை நிர்வகிக்கும் பத்திரிக்கைகளும் அறிவாளிகளும் தங்களது
தொண்டைகளில் மினரல் வாட்டர்களை விட்டுக்கொண்டும் இஞ்சி டீ உறிஞ்சிக்கொண்டும் உலகமே
பொறுப்பற்று இருப்பதாக சொல்லிக்கொண்டு தத் தமது TRB யை
உயர்த்திக்கொண்டார்கள்.
அரசும் பல
ஆயிரக்கணக்கான டண் பதுக்கல் பருப்புகளை " புதிய கண்டுபிடிப்புகள்
நிகழ்த்தி" தனது "இருப்புகளை" நிலைநிருத்திக்கொண்டது.
நேற்று வரை
ஆடு மேய்த்து நின்ற நம்மைப்போன்ற ஒரு "லஞ்ச் இரண்டு பஞ்ச்"
வாலாக்கள் "கார்போரேட்டுகள்" எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்லி
அடுத்த சம்பள உயர்வுக்கான "உண்ணா விரதத்தைப்" பற்றி பேச
ஆரம்பித்துவிட்டோம்.
40 ரூபாய்க்கு ஐஸ் கிரீம் வங்கி குழந்தைகளுக்கு
கொடுக்கும் குடும்ப தலைவிக்கு 5 ரூபாய்க்கு கீரை பேரம் பேசாமல் வாங்க
முடியவில்லை.
நமக்கு
சம்பளம் ஏறும் போதெல்லாம் தக்காளி, கத்தரிக்காய்
மற்றும் அரிசியும் விலை உயர வேண்டாமா??.
யாராவது
நகரத்து தெருவோர ஏழைகள் எப்படி வாழ்வார்கள் என்று கேட்டால் அந்த ஏழைகளின் சொந்த
ஊர், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்றும்
கேட்கச் சொல்ல வேண்டும்.
இதைப்பற்றி
யாராவது பேசுங்களேன் காண்களே. இதற்காகவும் நீங்கள் "வாங்கிய" விருதுகளை
விட்டுதாருங்கள் அறிவாளிகளே.
தயவுசெய்து
பல்லாண்டு காலம் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும் கிராமக் குடிகளில் வெள்ளம்
வடிய ஏற்பாடுகள் செய்யுங்கள் பத்திரிக்கைகளே.
இதை எல்லாம்
செய்தால் நமது சென்னையில் ஆக்கிரமிப்பு நிகழ்வதற்கு வாய்ப்பு இல்லை. வெள்ளமும்
வருவதற்கு வாய்ப்பும் இல்லை.
மற்றபடி
சென்னையின் எரி குளங்களை பாதுகாப்பது மிக சுலபம். அதிகாரவர்கத்தின் நோய்
தீர்க்கும் மருந்துகளான பார்க், நடை மேடைகள், படகு குழாம், மற்றும் மீன் பிடித்தல் போன்றவைகளை அவற்றோடு
இணைத்தால் அதிகார வர்க்கம் மற்றவர்களை ஆக்கிரமிப்பு செய்யாமல்
பார்த்துக்கொள்வர்கள்.
எனவே இன்று
முதல் வீட்டுக்கு காய்கறி கொண்டு வரும் பாட்டியிடம் 5 ரூபாய்க்கு பதில் 10 ரூபாய் கீரைக்கு கொடுக்க ஆரம்பிப்போம்.
இல்லையேல் பேரமாவது பேசாமல் இருப்போம். அட்லீஸ்ட்
அந்த பாட்டியின் வீட்டில் வெள்ளம் வடிய முயற்சி செய்வோம்.
Comments