உன்னால் முடியும்: சொந்த தொழில்தான் நிம்மதி கொடுத்தது
பெரிய நிறுவனத்தில், நல்ல சம்பளத் தில் வேலை பார்த்துக் கொண் டிருக்கிறோம். நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம், நிறுவனத்தை மூடப்போகிறார்கள் என்றால் என்ன செய் வீர்கள்.. சென்னை நோக்கியா நிறுவனத்தில் வேலை பார்த்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ஒரே நாளில் வேலை போனது. உறக்கமும் போனது. அதில் ஒருவர்தான் துரை ராஜலிங்கம். புதுச்சேரியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இவர். திடீரென வேலை இழந்த நிலையில், நிலைகுலையாமல் நிதானமாக யோசித்து மாற்று தொழிலை தேர்ந்தெடுத்தவர். இன்று 6 பேருக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக வளர்ந்து நிற்கிறார். பொறியியல் முடித்துவிட்டு சில ஆண்டுகள் அனுபவத்துக்குப் பிறகு நோக்கியா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். 5 ஆண்டுகளாக வேலைபார்த்துக் கொண்டிருந்த நிலையில், மைக்ரோசாப்ட் அந்த நிறுவனத்தை வாங்கிய பிறகு சென்னை ஆலையை மூட திட்டமிட்டனர். பல ஆயிரம் பணியாளர்களுக்கு ஒரு சில நாட்களிலேயே செட்டில்மெண்ட் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினர். இதுதான் வாழ்வாதாரம் என எண்ணிக் கொண்டிருந்த ஒரு வேலையை நாளையிலிருந்து பார்க்க முடியாது என்றால் எப்படி இருக்கும். ஒரே ந...