"விவசாயம்" எங்கே இருக்கிறோம், எங்கே இருக்கிறது.
நெடுவாசல், விவசாயிகள் போராட்டம் என்று வரும்போதெல்லாம், மனதின் மூலையில் soft corner வந்துவிட்டு போவதை உணர முடிகிறது. இது எனக்கு மட்டுமல்ல என்றே நினைக்கிறேன். இந்தியாவில் ஒருவர் இன்று என்ன தொழில் செய்துகொண்டிருந்தாலும் அவரது பாட்டனார் ஒரு விவசாயி என்ற "தொலைதூர" காரணமாகவும் இருக்கலாம். சமீபத்தில் கத்தாரில் ஒரு விவசாய கண்காட்சிக்கு சென்றிருந்தேன். கத்தாருக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம்??. கத்தார் ஒரு பாலைவன நாடு. நிலத்தினடியில் இரண்டு அடிக்கு கீழ் தோண்டவேண்டும் என்றாலும் மெஷின் வேண்டும் என்ற சுண்ணாம்பு பாறைகளால் ஆன நில அமைப்பு கொண்டது. பெரும்பாலான நிலத்தடி நீர் குடிப்பதற்கு லாயக்கற்ற உப்பு தண்ணீர். தங்களது முழு நீர் தேவைக்கும் கடல் தண்ணீரை சுத்திகரிதே பெறவேண்டும் என்ற கட்டாயம் உள்ள நாடு. கத்தாரில் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் வெப்பம் சாதரணமாக 40 டிகிரியை தாண்டிவிடும். மேலே குறிப்பிட்ட முன்றுமே விவசாயத்திற்கு உகந்தவை அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இன்று கத்தரில் கிட்டத்தட்ட 30 சதவி...