இலக்கிய வாசகனின் பயிற்சி - ஜெயமோகன்
அன்புள்ள ஜெ, முதலில் ஓநாய் குலச்சின்னம் வாசித்தேன் அதையடுத்தது உங்களின் இலக்கிய வாசிப்பு பரிந்துரைகளை எடுத்துவைத்து கிண்டிலில் கிடைப்பதை ஒவ்வொன்றாக வாசித்து வருகிறேன். “ஓநாய் குலச்சின்னம்” சீனாவின் மங்கோலிய பகுதியில் மேய்ச்சல் நிலச் சமூகம் பரிணாம வளர்ச்சியின் இயற்கை சமக்குலைவுகளும், மனிதனே பிரதானம் என்ற மாவோவின் சிந்தனையால் ஏற்படும் உள்விளைவுகளும் சொல்லப்பட்டுள்ளது. பொய்த்தேவு கருப்பன் முதலிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாக மேட்டுத்தெருவில் பிறந்த சோமு, சோமசுந்தர முதலியார் மளிகை மெர்ச்செண்டு என்று வளர்ந்து, பின் சோமுப் பண்டாரமாக, யாருமில்லாத அனாதையாக இறப்பது வரையான கதை. அடுத்ததாக ஒரு மாற்றத்திற்கு பாலகுமாரன் அவர்களின் “அகல்யா” எடுத்தேன். முன்பு பதினைந்து வருடங்களுக்கு முன்பு அகல்யாவை வாசித்திருந்தேன். அன்று என்னை மிகப் பாதித்த கதை. இன்றும் சிவசு, அகல்யாவின் காதலும் அவ்வப்போது வரும் மோகமும் என்னை வசீகரித்தது. ஆனால் இப்போது சிவசு மற்றும் அகல்யாவின் கதை கொஞ்சம் செயற்கையாக தெரிகிறது. நடைமுறையில் சாத்தியமில்லாத ஒரு கனவுத்தன்மையுள்ள உறவை சிவசு அகல்யாவின் மூலம் நாவ...