நிலைத்த பொருளாதாரம். டாக்டர் ஜெ. சி. குமரப்பா.




நிலைத்த பொருளாதாரம். டாக்டர் ஜெ. சி. குமரப்பா.


இயற்கையில் உள்ள பொருளாதாரத்தை ஐந்து வகையாகப் பகுக்கிறார். 

1. புல்லுருவிப் பொருளாதாரம் - தனது (உணவுத்) தேவைக்காக அடுத்த உயிரினத்தை அழிக்கும் வகையான பொருளாதாரம். எடுத்துக் காட்டாக சாருவுண்ணும் செடிகள் (parasitic), காட்டில் வசிக்கும் புலி முதலியன. 

2. கொள்ளைப் பெருளாதாரம் - ஒன்று தான் மட்டும் பயனடைந்து மற்றவற்றிற்கு எந்த பயனையும் அளிக்காத வகை. எடுத்துக் காட்டாக குரங்கு காட்டில் வாழ்வதற்காக பயன்படுத்திக் கொள்ளும் முறை. 

3. துணிவும் முயற்சியும் கொண்ட பொருளாதாரம் - தான் எடுத்துக் கொண்ட ஒன்றிற்கு பதிலாக வேறு ஒரு உதவியை கொடுக்கும் வகை. உதாரணமாக, தேனீக்கள் பூக்களில் தேனை எடுத்து பின் அதன் அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது. 

4. இணைந்து வாழும் பொருளாதாரம் - கூட்டமாக அதன் மொத்த இனத்தின் நன்மைக்காக வாழும் வாழ்க்கை - உதாரணம் தேனீக்கள். 

5. சேவைப் பொருளாதாரம் - எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல்  உலக நன்மைக்கும் எதிர்கால தேவைக்கும் உழைக்கும் உயர்ந்த வழிப் பொருளாதாரமாகும் . 

இவற்றில் ஒவ்வொன்றையும் விளக்குகிறது இந்நூல்,

பெரும் நாகரீகங்கள் எகிப்து, பாபிலோன், கிரீஸ்  போன்றவை அழிந்ததற்கு அவை சேவைப்பொருளாதாரத்தை கடைப்பிடிக்காததே காரணம் என்கிறார்.  

அந்த நாகரீகங்கள் அடிமை முறையாலும், ஆதிக்கத்தாலும் என்னதான்  கலை இலக்கியம் சிற்பம் போன்ற துறைகளில் சிறந்திருந்தாலும்  நிலைக்க முடியவில்லை. மாறாக இந்திய சீன நாகரீகங்கள் அதைவிட தொன்மையானதாக இருந்தாலும் அதன் நிலைத்த வன்முறையற்ற தன்மையால் நிலைத்து வளர்த்தது.

கீழ் நாட்டின் மதங்களும் மறு உலகம் பற்றிய நம்பிக்கைகளும் காட்டில் வேட்டையாடும் விலங்குகளை மனிதனை வேறுபடுத்தி நிலைத்த பல நூற்றாண்டுகள் இயங்கச் செய்திருக்கின்றன என்கிறார். 

ஒருமுறை  பாய் செய்யும் ஒரு குடும்பத்தை பார்க்கச் சென்றிருந்த போது அக்குடும்பத் தலைவர்,  தம் பரம்பரை இந்தத் தொழிலால் சிறப்பாக இருந்ததென்றும் தற்போது இந்த தொழில் நசிந்தது ஏன் என்றும் வினவுகிறார். 
அன்று சாப்பிடும் பொது வந்திருந்த விருந்தினர் அமர்வதற்கு தங்கள் நெய்த பாயையும்   டாக்டர் குமரப்பா அமர்வதற்கு ஜப்பானில் செய்த பாயையும்  விரிக்கிறார்கள். அப்போது சொல்கிறார். "நீங்கள் உங்கள் கையால் செய்யப்பட்ட பொருளை விட ஜப்பான் பொருளுக்கு அதிக மதிப்பளிக்கின்றீர்கள். நீங்களே இப்படி செய்யும் போது மற்றவர்கள் எப்படி அதனை மதித்து வாங்குவார்கள் என்கிறார். 

 திட்டமிடல்:

நம் திட்டமிடல் மனிதனின் ஆற்றல் முழு வளர்ச்சி அடையத் தேவையான சூழ் நிலையை, பெற உறுதிசெய்யுமாறு இருக்கவேண்டும்.. 

தேவையான முழுமையான உணவு, உடலைப் பாதுகாக்க உடை, இருப்பிட வசதி, உடலுக்கு பயிற்சி அளிக்கத் தேவையான வாய்ப்புகளும் தூய சூழலும், பரஸ்பர பழகும் சூழலும் கொண்டிருக்க வேண்டும் மற்றவற்றை அடைய மக்களுடைய சொந்த முயற்சிக்கு விட்டுவிடவேண்டும். அப்போது தான் அவர்களுக்கு தங்களின் சுதந்திர விருப்பத்திற்கு ஏற்ற வாய்ப்பு கிடைக்கும். இதுவே நிலைத்து நிற்கும். 

மிக இறுக்கமாக திட்டமிடல் இருந்தால் தன்னை சுதந்திரமாக வெளிப்படுத்தும் தேவை இல்லை. இத்தகைய சிறைச்சாலை வாழ்க்கைக்கு முழுமையான வாழ்க்கை ஆகாது. 


உற்பத்தியாளர்களே வசதி வாய்ப்புக்களை தொழிலார்களுக்கு அமைத்துக் கொடுப்பது பற்றி: 


உற்பத்தியாளர்கள் உயர்ந்த வாழ்க்கைத் தரங்களை அமைத்துக் கொடுப்பதால், தங்களின் ஊழியர்களின் சுதந்திரமான இயக்கத்தையும் ஆற்றலையும் செயலிழக்கச் செய்துவிடுகின்றனர்.  

தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் வகுத்து ஆலையிலேயே சினிமா, விளையாட்டு கூடம், வீட்டு வசதி, மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறை போன்றவற்றை வகுத்துக் கொடுப்பார்.  இவை சிறந்த வாழ்க்கைத் தரம் என்று நம்பவைப்பார். 

எவ்வளவுக் கெவ்வளவு தொழிலாளர்கள் இந்த தரங்கள் உயர்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்கள் தங்களது பேரம் பேசும் சக்தியை இழக்கிறார்கள். 

இங்கு உயர்ந்த வாழ்க்கைத்தரம் என்பதை சிக்கலான வாழ்க்கைத் தரம் என்று பிரிக்கிறார். இவ்வாறல்லாது எளிய வாழ்க்கைத்தரம் உடைய தொழிலாளர்கள் அதிக சுதந்திரமானவர்களாக இருக்கிறார்.

வேலை: 

வேலை என்பது routine, ஓய்வு, முன்னேற்றம், மன மகிழ்ச்சி ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதுவே நிறைவாகவும் மன மகிழ்ச்சியை கொடுப்பதாகவும், சக்தியையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பதாக இருக்கும். அதுவே பயிற்சியையும் அளித்து வளர்ச்சிக்கும் நிறைவிற்கும் வாய்ப்பளிக்கும். 

ஓய்வும் மகிழ்ச்சியையும் தரும் வேலை ஒரு நாட்டுக்கும், உடலுழைப்பை தரும் வேலை ஒரு நாட்டுக்கும் தரும் பொது அது முழுமையாக இல்லாமல் அங்கு கண்டிப்பாக நரம்பு தளர்ச்சியும் வந்து நிலைத்த தன்மை இல்லாமல் வன்முறை வரும். 


ஒரு தொழிற்சாலையில் உடலுழைப்பு மட்டும் உடைய அடிமைத்தனமான உழைப்பை ஒருவருக்கும், அந்த உழைப்பின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை சிலருக்கும் பிற்கப்பட்டால் வேலையின் நடைமுறை உழைப்பு அடிமை வேலையாகவும், உழைப்பின் பயன் நுகர்ச்சியாகவும் ஆகிவிடும். அடிமை வறுமையில் உழன்று மரணம் அடைகிறான். எஜமானாரோ அளவுக்கு மீறி துய்ப்பதால் மரணம் அடைகிறார்.

வேலையின் மகிழ்ச்சியும் வேலையை சிறு பகுதிகளாக பிரிப்பதும்.:

வேலையின் பிரிக்கப்பட்ட சிறு சிறு பங்கும், மொத்தத் தொழிலின் முழுமையை ஒட்டி இருக்கவேண்டும். காலணி செய்யும் தொழிற்சாலையில் ஒரு தொழிலாளிக்கு முழுமையான காலணி  செய்வதற்கு வாய்ப்பிருக்கவேண்டும் அல்லாது ஒரு ஆணி அடிக்கும் வேலைமட்டுமாக ஒருவருக்கு என்று பிரிக்கப் பட்டால் அந்த வேலையை அவர் தினமும் எட்டு மணிநேரம் என்று செய்தால் அது அவருக்கு எவ்வளவு ஊதியம் கொடுத்தாலும் நரம்புத் தளர்ச்சி அளிக்கவும் அவரை பைத்தியக் கார விடுதிக்கு அனுப்பவும் போதுமானது. 

இவ்வாறு உற்பத்தியாளர்கள் கடினமான உழைப்பைத் தங்களிடமிருந்து தருவித்து உழைப்பின் பயனையும் சுகத்தையும் மட்டும் கவர்ந்து கொள்ள முயற்சி செய்யும் பொது, நமது சோஷலிச நண்பர்கள் உழைப்பிலிருந்து ஓய்வை மட்டும் தனியே அள்ளியெடுக்க கனவு காண்கிறார்கள் என்கிறார். 


முழுமையான வேலையும் ஓய்வும் எவ்வாறு ஒரே சமயத்தில் இருக்க முடியும் என்பதற்கு தொப்பி செய்யும் ஒரு பள்ளி ஆசிரியரை காட்டுகிறார். 

தொப்பிக்கான பொருள்கள் வாங்குகையில் அவருக்கு மூலப்பொருட்கள் வாங்குகையில் உலகின் தொடர்பும் அதன் பிரச்சனைகளும் கிடைக்கிறது. 

மூலப் பொருட்களை உடல் உழைப்பினால் அவர் ஒன்று சேர்க்கிறார். 

பூ வேலைப்பாட்டை  அதில் தைப்பதின் மூலம் அவர் களைத்த திறமை வெளிப்படுகிறது..

வீட்டின் குழந்தை சத்தம் கொடுக்கும் பொது அவருக்கு வேடிக்கை விளையாட்டும் கிடைத்துவிடுகிறது.

இவ்வாறு இந்த வேலை தனது தேவை அனைத்தையும் நிறைவு செய்துகொள்ள வலுவுள்ளதாகவே இருக்கிறது.  எனவே இது அவருடைய ஆளுமையை நிலை நிறுத்தி செல்லவும் வழி வகுக்கிறது.
இத்தகைய முழுமையான வேலை எத்தனை கடினமான உடல் உழைப்பைக் கொண்டிருந்தாலும் அது அவனுக்கு மகிழ்ச்சியையே அளிக்கும். 

பாறைகளை குடைந்து உருவாக்கப் பட்ட எல்லோரா குகைகளும் அஜந்தா ஓவியங்களும்  இவ்வாறே உருவாக்கப் பட்டவையாக இருக்கமுடியும். இத்தகைய சிறப்புகளை இதுவே எடுத்துக் காட்டுவதாகவும் நினைவாலயமாகவும் விளங்குகிறது. 


Comments

Popular posts from this blog

தமிழ்ச் சிறுகதை : திறனாய்வாளன் பட்டியல் - ஜெயமோகன்

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜெயகாந்தன்