ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜெயகாந்தன்

உறவு என்பது ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளளது. இரண்டு நண்பர்கள் இடையிலும் கூட சார்பு நிலை இருக்கிறது. 

சார்பு என்பது பொருள், உறவு, அன்பு முதலிய எதையும் குறிக்கலாம். 

எங்கெல்லாம் உயிர் ஒன்றைச் சார்ந்து மற்றொன்று இருக்கிறதோ அங்கு இயல்பாகவே ஒருவகையான கொடுக்கல் வாங்கல் அமைந்துவிடுகிறது. அந்த கொடுக்கல் வாங்கல் எப்போதும் வாழ்க்கையில் சம மதிப்பு பெறுவதில்லை. 

மதிப்பு என்பது நேரத்தைப் பொறுத்து, இடத்தைப் பொறுத்து மாறுபடும் இயல்பைக் கொண்டது. 

எங்கு சமச்சீரற்ற கொடுக்கல் வாங்கல் நடக்கிறதோ அங்கே இயல்பான மேல் கீழ் படிநிலை அமைந்து விடுகிறது. 

ஒருவரை ஒருவர் சார்ந்து கொள்ளாமல் உறவு சாத்தியமா. சார்பற்ற உறவு ஒன்று இருக்கிறதா. 

திருமண உறவில் இந்த சோதனை முயற்சி தான்  நாவல்.


கல்யாணி பொதுவாழ்வில் பிறருக்காக நடிப்பவள். ஒரு நாடக நடிகை. 

ரங்கா பத்திரிகை எழுத்தாளன். நாடகங்களை விமர்சனம் செய்பவன். தொழிலில் நேர்மையாகவும், மிக கராறாகவும் விமர்சனம் செய்பவன் என்று பெயர்பெற்றவன். அதாவது தொழிலில் நடிக்காதவன், சமரசம் செய்துகொள்ளாதவன்.

தன்னளவே இருவரும் சுதந்திர வாழ்க்கை வாழ்பவர்கள். 

இருவரும் திருமண செய்துகொள்கிறார்கள். அவர்களுக்குள் நடக்கும் மனப்போராட்டங்கள். ஜெயகாந்தன் பார்வையில் விரிகிறது. 

கல்யாணி உலகியலில் நடித்தாலும் தன சொந்த வாழ்வில் இயல்பாக இருக்கிறாள், சுதந்திரமாக. அந்த சுதந்திர இயல்பால்  திருமணம் என்ற பந்தத்திலும் நிபர்ந்தனையற்ற அன்பு செலுத்த முடிகிறது. 

ரங்கா வெளியுலகின் பார்வைக்கு நவீன, புரட்சிகர சிந்தனை உள்ளவன். ஆனால் திருமண உறவில் மரபான மனதை விட்டு வெளிவர இயலவில்லை. 

அவனால் கணவனைச் சாராத மனைவியாக கல்யாணி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

சார்பு இல்லாத திருமண வாழ்க்கை நிம்மதியை குலைக்கிறது. இதில் எதோ ஒரு குறை இருக்கும் என்று தேடுகிறது. இயல்பான, மரபான ஆண் மனம். 

வழிவழியாக வந்த கணவனைச் சார்ந்தே மனைவி, மனைவியைச் சார்ந்தே கணவன் என்ற நிலைப்பாட்டை கடக்க இயலவில்லை. 

தன் உண்மையான காதலுக்காக கல்யாணி எதையாவது வீட்டுக் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறது.  அதாவது எதையும் எதிர்பார்க்காத காதலை கொடுக்க ரங்காவால் முடியவில்லை. 

அதாவது மரபை தாண்டி கல்யாணி வந்துவிட்டாலும் ரங்காவால் வரயிலவில்லை. 

இறுதியில் திருமணம் என்ற பந்தமே தங்களது இயல்பை குலைக்கிறது என்று முடிவுசெய்து விவாகரத்து செய்ய முடிவுசெய்கிறார்கள். 

இறுதியில் அவள் அவனைச் சார்ந்து இருக்கும்படி இயற்கை அமைகிறது.

உலகில் எங்கும் இருக்கும் சாதாரண ஆண் பெண் உறவு. அது அவனை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருகிறது. 


ஜெயமோகன் சொல்கிறார் "ஆண்கள் வாழ்க்கையில் பெண் பெரிதாக ஒன்றும் முக்கியம் அல்ல, அது ஓர் உறவு அவ்வளவே. அந்த உறவின் அளவைக்கொண்டே அப்பெண்ணின் முக்கியத்துவம் அமைகிறது. 

பெண்ணின் வாழ்க்கையில் ஆண் கொஞ்சம் கூட முக்கியம் அல்ல அவன் அவளுக்கு ஓர் வழிகாட்டியாக ஆசிரியனாக, கொள்கைத்துணைவனாக இருந்தால் அந்த அளவில் மட்டுமே அவ்வுறவுக்கு மதிப்பு""

இதை ஜெயகாந்தன் முயற்சித்து பார்த்திருக்கிறார். 


ஜெயகாந்தன் பார்வையில், முழுமையான தனிமனித சுதந்திரம் என்பது ஆண் பெண் உறவில், திருமண வாழ்க்கையில் சாத்தியமா என்ற தேடல், இறுதியில் சாத்தியம் இல்லை என்றே முடிவாகிறது. 

அடிமனதில் ஆழங்களை உணர்ந்தவர்தான் இத்தகைய படைப்பை கொடுக்க முடியும். 



Comments

Popular posts from this blog

தமிழ்ச் சிறுகதை : திறனாய்வாளன் பட்டியல் - ஜெயமோகன்

நிலைத்த பொருளாதாரம். டாக்டர் ஜெ. சி. குமரப்பா.