Posts

இலக்கிய வாசகனின் பயிற்சி - ஜெயமோகன்

Image
  அன்புள்ள ஜெ, முதலில் ஓநாய் குலச்சின்னம் வாசித்தேன் அதையடுத்தது உங்களின் இலக்கிய வாசிப்பு பரிந்துரைகளை எடுத்துவைத்து கிண்டிலில் கிடைப்பதை ஒவ்வொன்றாக வாசித்து வருகிறேன். “ஓநாய் குலச்சின்னம்” சீனாவின் மங்கோலிய பகுதியில் மேய்ச்சல் நிலச் சமூகம் பரிணாம வளர்ச்சியின் இயற்கை சமக்குலைவுகளும், மனிதனே பிரதானம் என்ற மாவோவின் சிந்தனையால் ஏற்படும் உள்விளைவுகளும் சொல்லப்பட்டுள்ளது. பொய்த்தேவு கருப்பன் முதலிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாக மேட்டுத்தெருவில் பிறந்த சோமு, சோமசுந்தர முதலியார் மளிகை மெர்ச்செண்டு என்று வளர்ந்து, பின் சோமுப் பண்டாரமாக, யாருமில்லாத அனாதையாக இறப்பது வரையான கதை. அடுத்ததாக ஒரு மாற்றத்திற்கு பாலகுமாரன் அவர்களின் “அகல்யா” எடுத்தேன். முன்பு பதினைந்து வருடங்களுக்கு முன்பு அகல்யாவை வாசித்திருந்தேன். அன்று என்னை மிகப் பாதித்த கதை. இன்றும் சிவசு, அகல்யாவின் காதலும் அவ்வப்போது வரும் மோகமும் என்னை வசீகரித்தது. ஆனால் இப்போது சிவசு மற்றும் அகல்யாவின் கதை  கொஞ்சம் செயற்கையாக தெரிகிறது. நடைமுறையில் சாத்தியமில்லாத ஒரு கனவுத்தன்மையுள்ள உறவை சிவசு அகல்யாவின் மூலம் நாவ...

நிலைத்த பொருளாதாரம். டாக்டர் ஜெ. சி. குமரப்பா.

Image
நிலைத்த பொருளாதாரம். டாக்டர் ஜெ. சி. குமரப்பா. இயற்கையில் உள்ள பொருளாதாரத்தை ஐந்து வகையாகப் பகுக்கிறார்.  1. புல்லுருவிப் பொருளாதாரம் - தனது (உணவுத்) தேவைக்காக அடுத்த உயிரினத்தை அழிக்கும் வகையான பொருளாதாரம். எடுத்துக் காட்டாக சாருவுண்ணும் செடிகள் (parasitic), காட்டில் வசிக்கும் புலி முதலியன.  2. கொள்ளைப் பெருளாதாரம் - ஒன்று தான் மட்டும் பயனடைந்து மற்றவற்றிற்கு எந்த பயனையும் அளிக்காத வகை. எடுத்துக் காட்டாக குரங்கு காட்டில் வாழ்வதற்காக பயன்படுத்திக் கொள்ளும் முறை.  3. துணிவும் முயற்சியும் கொண்ட பொருளாதாரம் - தான் எடுத்துக் கொண்ட ஒன்றிற்கு பதிலாக வேறு ஒரு உதவியை கொடுக்கும் வகை. உதாரணமாக, தேனீக்கள் பூக்களில் தேனை எடுத்து பின் அதன் அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது.  4. இணைந்து வாழும் பொருளாதாரம் - கூட்டமாக அதன் மொத்த இனத்தின் நன்மைக்காக வாழும் வாழ்க்கை - உதாரணம் தேனீக்கள்.  5. சேவைப் பொருளாதாரம் - எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல்  உலக நன்மைக்கும் எதிர்கால தேவைக்கும் உழைக்கும் உயர்ந்த வழிப் பொருளாதாரமாகும் .  இவற்றில் ஒவ்வொன்றையும் விளக்குக...

ஓநாய் குலச்சின்னம் - ஜியாங் ரோங் (சி. மோகன்)

Image
  ஒரு பிரதேசத்தில் மேய்ச்சல் சமூகம் விவசாய சமூகமாக மாற்றம் கொள்ளும் பாதையில் ஏற்படும் மாற்றங்களும், அதன் மூலம்  ஏற்படும் சமூக, இயற்கை சமக்குலைவுகளும் , மனிதனே பிரதானம் என்ற மாவோவின் சிந்தனையால் ஏற்படும் உள்விளைவுகளும் "ஜியாங் ரோங்"ன் புனைவின் வழி சொல்லப்பட்டுள்ளது.   சீனாவில் ஏற்பட்ட புரட்சியை அடுத்து அதுவரை அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழய சிந்தனை, பழைய கலாச்சாரம், பழைய சடங்கு, பழைய பழக்கவழக்கங்கள்  ஆகியவற்றை திருத்தி புதிய புரட்சி சிந்தனையை வளர்ப்பதின் அங்கமாக மூன்று சக மாணவர்களோடு ஜென் சென், மங்கோலியாவின் தொன்மையான மேய்ச்சல் நிலத்துக்கு சென்று அங்குள்ள மக்களோடு ஆடு மேய்க்கிறான்.   மேய்ச்சல் நிலத்தின் குடித்தலைவர் பில்ஜி. தந்தை போன்று  அவனுக்கு மேய்ச்சல் நிலத்தின் விழுமியங்களை கற்றுத்தருகிறார்.  "டெஞ்சர்" மேய்ச்சல் நிலத்தின் மலைக்கடவுள். ஓநாய்கள் அதன் பாதுகாவலர்கள்.  ஓலோன்புலாக் மேய்ச்சல் சமூகத்தின் உயிர்நாடியான புல் அங்கு பெரிய உயிராகவும் அதனைச் சார்ந்து  வாழ்பவை  சிறிய உயிர்களாகவும் இருக்கிறது.   மேச்சல் நி...

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜெயகாந்தன்

Image
உறவு என்பது ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளளது. இரண்டு நண்பர்கள் இடையிலும் கூட சார்பு நிலை இருக்கிறது.  சார்பு என்பது பொருள், உறவு, அன்பு முதலிய எதையும் குறிக்கலாம்.  எங்கெல்லாம் உயிர் ஒன்றைச் சார்ந்து மற்றொன்று இருக்கிறதோ அங்கு இயல்பாகவே ஒருவகையான கொடுக்கல் வாங்கல் அமைந்துவிடுகிறது. அந்த கொடுக்கல் வாங்கல் எப்போதும் வாழ்க்கையில் சம மதிப்பு பெறுவதில்லை.  மதிப்பு என்பது நேரத்தைப் பொறுத்து, இடத்தைப் பொறுத்து மாறுபடும் இயல்பைக் கொண்டது.  எங்கு சமச்சீரற்ற கொடுக்கல் வாங்கல் நடக்கிறதோ அங்கே இயல்பான மேல் கீழ் படிநிலை அமைந்து விடுகிறது.  ஒருவரை ஒருவர் சார்ந்து கொள்ளாமல் உறவு சாத்தியமா. சார்பற்ற உறவு ஒன்று இருக்கிறதா.  திருமண உறவில் இந்த சோதனை முயற்சி தான்  நாவல். கல்யாணி பொதுவாழ்வில் பிறருக்காக நடிப்பவள். ஒரு நாடக நடிகை.  ரங்கா பத்திரிகை எழுத்தாளன். நாடகங்களை விமர்சனம் செய்பவன். தொழிலில் நேர்மையாகவும், மிக கராறாகவும் விமர்சனம் செய்பவன் என்று பெயர்பெற்றவன். அதாவது தொழிலில் நடிக்காதவன், சமரசம் செய்துகொள்ளாதவன். தன்னளவே இருவரும் சுதந்திர வாழ்க்கை வாழ்பவர்கள். ...

"விவசாயம்" எங்கே இருக்கிறோம், எங்கே இருக்கிறது.

Image
நெடுவாசல், விவசாயிகள் போராட்டம் என்று வரும்போதெல்லாம், மனதின் மூலையில்  soft corner வந்துவிட்டு போவதை உணர முடிகிறது. இது எனக்கு மட்டுமல்ல என்றே நினைக்கிறேன். இந்தியாவில் ஒருவர் இன்று என்ன தொழில் செய்துகொண்டிருந்தாலும்  அவரது பாட்டனார் ஒரு விவசாயி என்ற "தொலைதூர" காரணமாகவும் இருக்கலாம்.    சமீபத்தில் கத்தாரில் ஒரு விவசாய கண்காட்சிக்கு சென்றிருந்தேன். கத்தாருக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம்??. கத்தார் ஒரு பாலைவன நாடு. நிலத்தினடியில் இரண்டு அடிக்கு கீழ் தோண்டவேண்டும் என்றாலும் மெஷின் வேண்டும் என்ற சுண்ணாம்பு பாறைகளால் ஆன நில அமைப்பு கொண்டது. பெரும்பாலான நிலத்தடி நீர் குடிப்பதற்கு லாயக்கற்ற உப்பு தண்ணீர். தங்களது முழு நீர் தேவைக்கும் கடல் தண்ணீரை சுத்திகரிதே பெறவேண்டும் என்ற கட்டாயம் உள்ள நாடு. கத்தாரில் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் வெப்பம் சாதரணமாக 40 டிகிரியை தாண்டிவிடும்.  மேலே குறிப்பிட்ட முன்றுமே விவசாயத்திற்கு உகந்தவை அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.     இருந்தாலும் இன்று கத்தரில் கிட்டத்தட்ட 30 சதவி...