ஓநாய் குலச்சின்னம் - ஜியாங் ரோங் (சி. மோகன்)
ஒரு பிரதேசத்தில் மேய்ச்சல் சமூகம் விவசாய சமூகமாக மாற்றம் கொள்ளும் பாதையில் ஏற்படும் மாற்றங்களும், அதன் மூலம் ஏற்படும் சமூக, இயற்கை சமக்குலைவுகளும் , மனிதனே பிரதானம் என்ற மாவோவின் சிந்தனையால் ஏற்படும் உள்விளைவுகளும் "ஜியாங் ரோங்"ன் புனைவின் வழி சொல்லப்பட்டுள்ளது. சீனாவில் ஏற்பட்ட புரட்சியை அடுத்து அதுவரை அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்த பழய சிந்தனை, பழைய கலாச்சாரம், பழைய சடங்கு, பழைய பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை திருத்தி புதிய புரட்சி சிந்தனையை வளர்ப்பதின் அங்கமாக மூன்று சக மாணவர்களோடு ஜென் சென், மங்கோலியாவின் தொன்மையான மேய்ச்சல் நிலத்துக்கு சென்று அங்குள்ள மக்களோடு ஆடு மேய்க்கிறான். மேய்ச்சல் நிலத்தின் குடித்தலைவர் பில்ஜி. தந்தை போன்று அவனுக்கு மேய்ச்சல் நிலத்தின் விழுமியங்களை கற்றுத்தருகிறார். "டெஞ்சர்" மேய்ச்சல் நிலத்தின் மலைக்கடவுள். ஓநாய்கள் அதன் பாதுகாவலர்கள். ஓலோன்புலாக் மேய்ச்சல் சமூகத்தின் உயிர்நாடியான புல் அங்கு பெரிய உயிராகவும் அதனைச் சார்ந்து வாழ்பவை சிறிய உயிர்களாகவும் இருக்கிறது. மேச்சல் நி...